பொரிஸ் ஜோன்சன் உட்பட அமைச்சர்கள் ரஷ்யாவுக்குள் நுழையத் தடை!!


உக்ரைனின் போர் விவகாரத்தில் பிரித்தானியாவின் தலையீட்டைத் தொடர்ந்து பிரதமர் போரிஸ் ஜோன்சன் உட்பட அமைச்சர்கள் ரஷ்யாவிற்குள் நுழைவதற்கு ரஷ்யா தடை விதித்துள்ளது.

உக்ரைனை ஆக்கிரமித்ததில் இருந்து அதன் மீது பிரிட்டன் விதித்துள்ள தடைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மொஸ்கோ தெரிவித்துள்ளது.

தடைப்பட்டியலில் உள்ளவர்கள்:-

 • பிரதமர் போரிஸ் ஜோன்சன்
 • வெளியுறவுச் செயலாளர் லிஸ் ட்ரஸ்
 • பாதுகாப்புச் செயலாளர் பென் வாலஸ்
 • துணைப் பிரதமர், லார்ட் சான்சலர் மற்றும் நீதிக்கான மாநிலச் செயலாளர் டொமினிக் ராப்
 • போக்குவரத்து கிராண்ட் ஷாப்ஸ் உள்துறை செயலாளர் பிரிதி படேல்
 • சான்ஸ்சிலர் ரிஷி சுனக்
 • தொழில்முனைவு, எரிசக்தி மற்றும் தொழில்துறை உத்தி அமைச்சர் குவாசி குவார்டெங்
 • டிஜிட்டல் மயமாக்கல், கலாச்சாரம், ஊடகம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாடின் டோரிஸ்
 • ஆயுதப்படை அமைச்சர் ஜேம்ஸ் ஹீப்பி
 • ஸ்காட்லாந்தின் முதல் அமைச்சர் நிக்கோலா ஸ்டர்ஜன்
 • இங்கிலாந்து மற்றும் வேல்ஸிற்கான அட்டர்னி ஜெனரல் மற்றும் வடக்கு அயர்லாந்தின் அட்வகேட் ஜெனரல் சுயெல்லா பிராவர்மேன்
 • பிரித்தானிய முன்னாள் பிரதமருமான தெரசா மே

No comments