இது சும்மா புலூடா:சஜித்

 


இடைக்கால அரசு என்பது உள்கட்சி அரசியலைத் தவிர வேறில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

புதிய இலங்கையானது வலுவான மாற்றங்களுடனேயே அடுத்த கட்டத்தை நோக்கி நகர வேண்டும். வெறும் தலைமை மாற்றங்களுடன் மட்டுமல்ல எனவும் அவா் குறிப்பிட்டுள்ளார்.

நேற்றிரவு பிரதமர் தவிர்ந்த அனைத்து அமைச்சர்களும் தங்கள் ராஜினாமா கடிதங்களை பிரதமரிடம் கையளித்த நிலையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர்கள் அனைவரும் பதவி விலகத் தீர்மானித்துள்ள போதும், பிரதமர் இன்னமும் பதவியில் தொடர்கிறார். தலைமை அமைச்சர் பதவி விலகாததால் அமைச்சரவை முழுமையாக கலையவில்லை என்பதே பொருளாகும். இவ்வாறான நிலையிலேயே வலுவான மாற்றம் வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே அமைச்சர்கள் தங்கள் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடமே கையளிக்கவேண்டும்  இல்லாவிட்டால் அந்த இராஜினாமா சட்டபூர்வமானதில்லை என சட்டத்தரணி சாலியபீரிஸ் தெரிவித்துள்ளார்

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது

அமைச்சர்கள் தங்கள் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளிக்கும்போதே அவர்கள் அமைச்சர் பதவியிலிருந்து விலகிவிட்டனர் என கருதப்படும்.

அமைச்சர்கள் பிரதமரிடம் தங்கள் இராஜினாமாவை கையளித்துள்ளனர் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன அப்படியானால் இந்த இராஜினாமாக்கள் சட்டபூர்வ தன்மையை கொண்டவையில்லை.

ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் அமைச்சரவைக்கும் என்ன நடக்கின்றது என்பதை மக்களிற்கு தெளிவுபடுத்தவேண்டிய கடப்பாடு உள்ளது.

எங்கள் நாட்டினாலும் பொருளாதாரத்தினாலும் இந்த நிச்சயமற்ற நிலையை தாங்கமுடியாது என நான் கருதுகின்றேன்.No comments