கோட்டாபய ராஜபக்ஷ ஏற்றுக்கொள்வார் ?ராஜபக்ச அமைச்சரவை அமைச்சர்களின் இராஜினாமா கடிதங்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று ஏற்றுக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறித்த இராஜினாமா கடிதங்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் ஜனாதிபதியிடம் உத்தியோகப்பூர்வமாக இன்று கையளிக்கப்பட உள்ளது.

நேற்றிரவு இடம்பெற்ற அவசர கூட்டத்தில், அமைச்சர்கள் தமது இராஜினாமா கடிதங்களில் கையொப்பமிட்டு, பிரதமரிடம் கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே  அமைச்சுப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்ட விமல் வீரவன்ச, உதய கம்மன்பில உட்பட 16 பேர் நாளை (05) பாராளுமன்றத்தில் சுயேட்சைக் குழுவாக  தனித்தனியாக அமர்வார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவும் அரசாங்கத்தில் இருந்து விலகி தனியே அமரவுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் அமைச்சுப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்ட போதிலும் அவர்கள் இன்னும் ஆளும் கட்சியிலேயே உள்ளனர்.

இந்த நிலையில், விமல் வீரவன்சவும், உதய கம்மன்பிலவும் நாளை பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை விடுத்து சுயேச்சையாக செயற்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று நாளை (05) பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

No comments