கோத்தாவின் இணையம் ஊடுருவப்பட்டது!





அநாமதேய இந்தியா என்ற ஹக்கர் குழுவினர் நேற்று இலங்கை ஜனாதிபதியின் இணையத்தளத்திற்குள் ஊடுருவினரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை நேற்று சில மணிநேரம் பயன்படுத்த முடியாத நிலை காணப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்டுள்ள ஜனாதிபதியின் ஊடக பிரிவு பலர் இணையத்தளத்தை ஓரேநேரத்தில் பயன்படுத்த முயன்றதால் இந்த நிலைமை ஏற்பட்டது என தெரிவித்துள்ளது என மோர்னிங் செய்தி வெளியிட்டுள்ளது.

நிலைமை தற்போது கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது நிலைமையை சரிசெய்துள்ளோம் என தெரிவித்துள்ள ஜனாதிபதியின் ஊடக பிரிவு எனினும் விமானப்படை மற்றும் இலங்கையின் கணிணி அவசரசூழ்நிலை பிரிவு ஆகியன இது குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளன எனவும் தெரிவித்துள்ளதாக மோர்னிங் செய்தி வெளியிட்டுள்ளது.

மூன்றாம் தரப்பின் செயற்பாடுகள் குறித்து இன்னமும் உறுதி செய்யப்படவில்லை என ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ள போதிலும் அநாமதேய ஹக்கர் குழு ஜனாதிபதியின் இணையத்தை ஹக் செய்ததாக தெரிவித்துள்ளது.

No comments