ஆபாசப் பட விவகாரம்: பதவி விலகினார் நீல் பாரிஷ்


பிரித்தானியாவில் உள்ள கொன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான நீல் பாரிஷ், ஹவுஸ் ஆஃப் காமன்ஸில் இரண்டு முறை ஆபாசப் படங்களைப் பார்த்ததாக ஒப்புக்கொண்டதால் அவர் பதவி விலகியுள்ளார்.

பைத்தியக்காரத்தனத்தில் தான் ஆபாசத்தைப் பார்த்ததாக ஒப்புக்கொண்டார். முதல் முறை தற்செயலாக நடந்ததாக நீல் பாரிஷ் பிரபல ஊடகம் ஒன்றிடம் கூறினார்.

இந்த சம்பவம் தொடர்பாக 65 வயதான டிவெர்டன் மற்றும் ஹொனிடன் நாடாளுமன்ற உறுப்பினர் கொன்சர்வேட்டிவ் கட்சியில் இருந்து நேற்று வெள்ளிக்கிழமை இடைநீக்கம் செய்யப்பட்டார். 

நீல் பாரிஷின் பதவி விலகல் தென்மேற்கு இங்கிலாந்தில் உள்ள தொகுதிக்கு இடைத்தேர்தலை நடத்துவதற்கு வழியை ஏற்படுத்தியுள்ளது.

நீல் பாரிஷின் கடந்த 12 ஆண்டுகளாக சேவைக்கு கொன்சர்வேட்டிவ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் நன்றி தெரிவித்தார்கள்.

எங்கள் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதற்கான அவரது முடிவை நாங்கள் ஆதரிக்கிறோம் என்று செய்தித் தொடர்பாளர் மேலும் கூறினார்.

No comments