ஐரோப்பிய நாடுகளில் பணவீக்கம் 7.5 விழுக்காடு அதிகரிப்பு


உக்ரைன் - ரஷ்யா போர் காரணமாக எரிபொருள் விலை உயர்ந்துள்ளதால் யூரோவைப் பயன்படுத்தும் ஐரோப்பி நாடுகளில் பணவீக்கம் அதிகரித்துள்ளது. 

தற்போது ஆண்டு பணவீக்கம் இந்த மாதம் 7.5 விழுக்காடு வரை உயர்ந்துள்ளது. இதையடுத்து ஐரோப்பிய நாடுகளில் எரிசக்திகளின் விலை 38 விழுக்காடு வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் 34.3 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐரோப்பா பண வீக்கம் அமெரிக்க ஆண்டு பணவீக்கத்திலும் எதிரொலித்துள்ளது. 1981க்கு அமெரிக்காவின் பணவீக்கம் கடந்த மாதம் 8.5 விழுக்காடு உயர்ந்துள்ளது.

ரஷ்ய - உகிரைன் போர், ரஷ்யாவிடம் இருந்து பெறப்படும் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்திற்கு தடங்களாக உள்ளது. இதனால் கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீண்டு வரும் நாடுகளுக்கு ரஷ்யா உக்ரைன் போர் மீண்டும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இப்பண வீக்கத்தால் மூலப்பொருட்கள் மற்றும் உதிரி பாகங்களில் விலை உயர்ந்துள்ளது.  யேர்மனி மின்சார ஆற்றலை பயன்படுத்துவதற்கு மக்களை ஊக்குவித்து வருகிறது. யேர்மனியின் ஐஜி மெட்டல் தொழிலாளர் சங்கம் தொழிலாளர்களுக்கான ஊதியத்தை 8.2 சதவீதம் உயர்த்துவதற்கு வலியுறுத்தியுள்ளது.

ஐரோப்பிய நாடுகள் எரிபொருள் இறக்குமதிக்கு ரஷியாவையே நம்பி இருக்கிறது. உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷியாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தாலும், அதிகரிக்கும் வெப்பம், மின்சார பயன்பாடு மற்றும் ஆட்டோமொபைல் எரிபொருள் விலை உயர்வு ஆகியவை ஐரோப்பிய நாடுகள் ரஷியாவிடம் வர்த்தகம் செய்வதை நிறுத்த முடியாமல் செய்கிறது. இந்த பணவீக்கத்தின் காரணமாக ஐரோப்பிய மத்திய வங்கி வட்டி விகிதங்களை உயர்த்துவதற்கு ஆலோசனை செய்து வருகிறது.

No comments