பிரான்ஸ் அதிபர் மக்ரோன் மீது தக்காளி வீச்சு!


பிரஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் மீது எதிர்ப்பாளர் ஒருவரால் தக்காளிப்பழ வீச்சு நடத்தப்பட்டது.

நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து நேற்றுப் புதன்கிழமை மக்ரோன் பொதுவெளியில் மக்களைச் சந்திப்பதற்காக பாரிசின் வடமேற்கில் உள்ள செர்ஜி சென்றிருந்தார்.

அங்கு அமைந்துள்ள சந்தையில் பொதுமக்களைச் சந்தித்தபோது எதிர்ப்பாளர் ஒருவரால் மக்ரோனைக் குறிவைத்து தக்காளிப்பழங்களால் தாக்கப்பட்டார்.

நல்வாய்ப்பாக மக்ரோன் மீது வீசப்பட்ட தக்காளிப் பழம் அவர் மீது படாமல் அருகில் இருந்தவர்கள் மீது பட்டது. 

இதயறிந்த பாதுகாவர்கள் மக்ரோனின் தலையைக் கைகளைக் கொண்டு தலையில் படாதவாறு மூடி மறைத்துக்கொண்டார். அத்துடன் கறுப்பு நிறக் குடை ஒன்றை விரித்து அவரின் மீது தக்காளித் தாக்குதல் நடக்காதவாறு அவரைப் பாதுகாத்தனர்.

இதேபோன்று கடந்த வருடம் ஜூன் மாத்தத்தில் மற்றொரு பயணத்தில் உள்ளூர் மக்களை வாழ்த்தும்போது ஒரு நபரால் அவர் முகத்தில் அறை வாக்கியிருந்தார்.

மறுபுறத்தில் எதிர்ப்பாளர் ஒருவர் மேசையிலிருந்து மக்ரோன் இருந்த கூட்டத்தினுள் பாய்வதை காணொளி காண்பிக்கிறது.

No comments