ஈபிடிபிக்கும் எச்சரிக்கை!அரசுக்கு ஆதரவு வழங்காதே எனத் தெரிவித்து வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரின் அலுவலகம் இன்று (280 காலை முற்றுகையிடப்பட்டு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.

காமினி மகாவித்தியாலயத்திற்கு முன்பாக ஒன்றிணைந்த கூட்டுத் தொழிற்சங்கத்தினர் அங்கிருந்து, மன்னார் வீதியில் அமைந்துள்ள மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், ஈபிடிபி பாராளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன் அவர்களின் அலுவலகத்திற்கு முன்னால் சென்று போராட்டத்தை மேற்கொண்ட ஒன்றினைந்த தொழிற் சங்கத்தினர் ஜனாதிபதி கோட்டா, பிரதமர் மகிந்த உள்ளிட்ட அரசாங்கத்திற்கு எதிராக கோசங்களை எழுப்பியதுடன், திலீபன் எம்.பியே அரசுக்கு ஆதரவு வழங்காதே, திலீபன் எம்.பியே அரசுக்கு ஆதரவு வழங்கினால் ஊருக்கு வராதே எனவும் கோசங்களை எழுப்பியிருந்தனர்.

சுமார் 30 நிமிடங்கள் குறித்த அலுவலகத்தை முற்றுகையிட்ட ஆர்ப்பாட்டக்காரார்கள் அலுவலகப் பகுதியில் கறுப்பு கொடியை பறக்க விட்டதுடன், அலுவலக மதிலில் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்காதே என தமிழிலும், அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கினால் ஊருக்கு வராதே என சிங்களத்திலும் பெரிதாக பொறித்து விட்டு அங்கிருந்து சென்றனர்.

குறித்த போராட்டடத்தில் இலங்கை வங்கி ஊழியர்கள், மின்சார சபை ஊழியர்கள், தபால் நிலைய ஊழியர்கள், ஆசிரிய சங்க ஊழியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

No comments