ரஷ்யாவை அச்சுறுத்தும் மேற்கு நாடுகளுக்கு எங்களின் பதிலடி மின்னல் வேகத்தில் இருக்கும் - புடின் எச்சரிக்கை


உக்ரைன் பிரச்னையில் தலையிடும் நாடுகளால் எங்கள் நாடு (ரஷ்யா) அச்சுறுத்தப்பட்டால் அணு ஆயுதத்தை பயன்படுத்தவும் தயங்க மாட்டோம் என ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார்.

செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் உரையாற்றம் போதே அவர் இக்கருத்தினை வெளியிட்டுள்ளார். 

ரஷ்யாவை அச்சுறுத்தும் எவருக்கும் எங்களின் பதிலடி மின்னல் வேகத்தில் இருக்கும் என்று எச்சரித்தார்.

எந்த ஒரு நாட்டையும் தாக்குவதற்குத் தேவையான ஆயுதங்கள் எங்களிடம் இருக்கிறது. அதனால் நாங்கள் பெருமை கொள்ளவில்லை என்றும் குறிப்பிட்டார்.

உக்ரைனை நண்பனாக பாவித்து வந்ததாகவும் மேற்கத்திய நாடுகள் அதனை ரஷ்யாவுக்கு எதிரான நாடாக மாற்றி விட்டதாகவும் புடின் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments