யாழில் விபத்து: தந்தை பிள்ளைகள் உட்பட மூவர் உயிரிழப்பு
யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் தொடருந்துடன் கெப் ரக வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள் உள்ளிட்ட மூவர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் கொடிகாமம் தவசிக்குளம் பகுதியை சேர்ந்த தந்தையான 45 வயதுடைய நாகமணி தயாபரன் என்பவரும் அவரது இரு பிள்ளைகமான 15 தனுஷன் மற்றும் 12 வயதுடைய ஜனுஷன் ஆகியோர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி இன்று வெள்ளிக்கிழமை பயணித்த தொடருந்துடன் கொடிகாமம் மிருசுவில் வைத்தியசாலைக்கு அண்மையில் உள்ள தொடருந்துக் கடவையில் கெப் ரக வாகனம் மோதி விபத்துக்கு உள்ளானது.
Post a Comment