கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்


வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இன்று சனிக்கிழமை முற்பகல் 11 மணியளிவில் கிளிநொச்சி மாவட்ட அலுவலம் முன்பாக இப்போராட்டம் நடத்தப்பட்டது.

போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் யுத்தத்தில் ஒப்படைக்கப்பட்ட உறவுகள் எங்கே? பிள்ளைகள் எங்கே என்ற பதாதைகளையும் பிள்ளைகளின் படங்களையும் தாங்கியிருந்தார்கள்.

ஒவ்வொரு மாதமும் 30 ஆம் திகதி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.

No comments