மன்னாரிலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் போராட்டம்


மன்னாரிலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் மாவட்ட செயலகத்திற்கு முன்பாகப் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இன்று சனிக்கிழமை முற்பகல் 10.30 மணியளவில் நடைபெற்ற போராட்டத்தில் உறவுகளினால் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு பதில் சொல், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் எங்கே?, சர்வதேச விசாரணை வேண்டும், இராணுவத்தின் கையில் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகள் எங்கே?, 20 ஆம் திருத்தத்தை நீக்கு போன்ற வாசகங்கள் எழுத்திய பதாதைகளைத் தாங்கி நின்றனர்.

இப்போராட்டத்தில் மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி மனுவல் உதயச்சந்திரா, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், உள்ளூராட்சி மன்றப் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

No comments