ஊடரங்கிலும் கொழும்பில் போராட்டம்


இலங்கையில் ஊடரங்கு அமுலில் உள்ள நிலையிலும் நாடு தழுவிய ரீதியில் அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டங்கள் வெடித்துள்ளன.

இன்று காலை ஞாயிற்றுக்கிழமை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நெலும் பொக்குண திரையரங்கிற்கு அருகில் போராட்டத்தை ஆரம்பித்த போராட்டக்காரர்கள் சுதந்திர சதுக்கத்திற்குள் நுழைய முயற்சித்த போதிலும் பாதுகாப்புப் படையினர் அதற்கு அனுமதிக்கவில்லை. பாதை முற்றாக மூடப்பட்டதால் ஆர்ப்பாட்டம் கம்பி மறிப்பு அரங்களுடன் நிறைவடைந்தது.

No comments