சஜித் தயாராம்:மகிந்த 15 கதிரை போதாதென்கிறார்!



இதனிடையேஎண்ணிக்கைஇலங்கையில் ஆட்சி பொறுப்பை ஏற்க தான் தயாராக இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்றைய தினம் நாடாளுமன்றில் அறிவித்துள்ளார்

எனினும் அவ்வாறு தான் ஆட்சி பொறுப்பை ஏற்க வேண்டுமாயின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை முழுமையாக நீக்கப்பட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதனை நீக்க வேண்டியது அவசியமாகும். அவ்வாறானதொரு அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் கீழ் தற்காலிக அரசாங்கமோ இடைக்கால அரசாங்கமோ கொண்டு செல்ல முடியாது.

ராஜபக்சர்களின் தலைமைத்துவம் அல்லது அவர்களுடன் தொடர்புடையோர் இந்த செயற்பாடுகளிலிருந்து விலகி இருப்பார்களாயின் நாம் பேச்சுவார்த்தைக்கு தயார்.

இந்த நாட்டு மக்கள் மோசமான வகையில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த பாதிப்பிலிருந்த அவர்களை துரிதமாக மீட்டெடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்

இதனிடையே புதிய அமைச்சரவையை 15 பேராக மட்டுப்படுத்தும் பிரேரணையை அரசாங்கம் கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏனெனில் அமைச்சுக்களின் எண்ணிக்கை குறைப்பு நடவடிக்கை மீது அமைச்சர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்,


இவ்வாறான இக்கட்டான தருணத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விருப்பமில்லாத தீர்மானத்தை எடுக்க முடியாது என்பதால், அரசியலமைப்பின் பிரகாரம் 30 அமைச்சர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

No comments