கவனத்தை ஈர்த்துள்ள ஈழ ஆதரவு மாநாடு!


ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு ஒருங்கிணைத்திருக்கும் 'ஈழத்தமிழர்க்கு விடியல்' தமிழ் மக்கள் கோரிக்கை மாநாடு, ஏப்ரல் 9ம் நாள் சனிக்கிழமை சென்னையில் இடம்பெறவுள்ளது.

ஈழத்தமிழர் தோழமைக் கட்சிகள், அமைப்புக்களைச் சேர்ந்த திரு.பழ.நெடுமாறன், திரு.வைகோ, திரு.தொல் திருமாவளவன், திரு.பொன்னையன், திரு.கே.எஸ்.இராதகிருஸ்ணன், தோழர் அ.சா.உமர் பாருக், தோழர் திருமுருகன் காந்தி, திரு.தி.வேல்முருகன், தோழர் கொளத்தூர் மணி, திரு.உ.தனியரசு, தோழர் கி.வெங்கட்ராமன், தோழர் சுப.உதயகுமார், தோழர் மீ.த.பாண்டியன், போராசிரியர் ராமு மணிவண்ணன், தோழர் சிங்கராயர், தோழர் செந்தில், திரு.இலயோலா மணி, தோழர் கு.இராமகிருட்ணன், தோழர் தியாகு, திரு.பாரிமைந்தன், திரு.அய்யாத்துரை தமிழினியன், திரு.அரவிந்த ஆகியோர் இம்மாநாட்டில் பங்கெடுக்கின்றனர்.

சிறப்பு தீர்மானம்:

சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள பொருளியல் நெருக்கடியால் பெரும் அவலத்திற்கு உள்ளாகியுள்ள , சிங்களர்கள், ஈழத் தமிழர்கள், தமிழ் முஸ்லிம்கள், மலையகத் தமிழர்கள், “கோட்டபய வீட்டுக்குப் போ” எனக் கிளர்ந்தெழுந்து நடத்திவரும் போராட்டத்தை இம்மாநாடு வாழ்த்துகிறது.  

அதேநேரத்தில் , இப்போராட்டம் ஆள்மாற்றம், ஆட்சி மாற்றம் என்பதாக முடிந்து போய்விடக் கூடாது.  பொருளியல் நெருக்கடிக்கு வித்திட்ட சிங்கள பெளத்தப் பேரினவாத ஒடுக்குமுறை அரசியலுக்கு முடிவுகட்டி, தேசிய இனச் சிக்கலுக்கு குடியாட்சியத் தீர்வு காண்பதில்தான் இலங்கை தீவில் உள்ள மக்களின் வாழ்வும் நல்வாழ்வும் எதிர்காலமும் அடங்கியுள்ளது என்பதை புரிந்து கொண்டு அனைத்து தரப்பாரும் அதை நோக்கி பாடுபட வேண்டும் என இம்மாநாடு வேண்டுகோள் விடுக்கிறது.

 

No comments