சாணக்கியனிற்கு நிதி அமைச்சு இல்லையாம்!கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ராஜபக்ச தரப்புக்களது நெருங்கிய சகாவுமான இரா.சாணக்கியன் நிதி அமைச்சராக பதவியேற்கவுள்ளதாக தெரிவித்து மட்டக்களப்பு நகரில் பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் இலங்கை தமிழரசுக் கட்சியின் வாலிப முன்னணி என்ற பெயரில் குறித்த பதாகை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

அதில் புதிய நிதியமைச்சராக பதவியேற்கவுள்ள இராசமாணிக்கம் சாணக்கியனுக்கு வாழ்த்துகள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த பதாகை தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவிவருகின்றது.

இந்த நிலையில் தங்களது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து இலங்கை தமிழரசுக் கட்சியின் வாலிப முன்னணி முறைப்பாடு செய்துள்ளது.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் தலைவர் கி.சேயோன் வெள்ளிக்கிழமை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இது ஒரு அரசியல் காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடே, குறித்த இழி செயற்பாட்டுக்கும் வாலிபர் முன்னனிக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments