ஒற்றையாட்சியில் உறுதி!



தென்னிலங்கையில் நடைபெறும் போராட்டங்களில் தமிழ் மக்களை இணைந்து கொள்ள கோரியே இத்தகைய தரப்புக்கள் வலியுறுத்திவருகின்றன.

இந்நிலையில் சமூக வலை பதிவர் ஒருவர் கருத்தில் ,

தமிழ் மக்கள்  பல சந்தர்ப்பங்களை தவறவிட்டு விட்டதாக ஒரு சில தமிழ் அரசியல் விற்பன்னர்கள்  பிரச்சாரம்  செய்து வருகின்றார்கள்.


கடந்த காலங்களில் நடைபெற்ற பல சமாதான முயற்சிகளின் தோல்விக்கு தமிழர்களும் புலிகள் இயக்கமும் தான்  காரணம் என்றும் அவதூறு பரப்புகின்றார்கள் 

புலிகள் இயக்கம் ஒரு நாட்டிற்குள் இடைக்கால தீர்வாக ISGA ஐ முன் வைத்தார்கள், 

சுனாமி பொதுக்கட்டமைப்புக்கு (PTOMS)  உடன்பட்டார்கள் என பல வரலாற்றின் சந்தர்ப்பங்களை இவர்கள் பலரும் இலகுவில் மறந்து விடுகின்றார்கள் 

இது மாத்திரமின்றி புலிகள் இயக்கம் உள்ளக சுயநிர்ணய அடிப்படையில் தீர்வுக்கு தயாராக இருப்பதாக கூட வெளிப்படையாக அறிவித்து இருந்தார்கள் 

குறிப்பாக 2004 ஆம் ஆண்டு மாவீரர் தின உரையில் தலைவர் அவர்கள் 

ஜனாதிபதி சந்திரிகாவிடமும் அவர், கூட்டாட்சி அமைத்திருக்கும் கட்சிகளிடமும் எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியிடமும் தமிழ் மக்களது இனப் பிரச்சினையின் அடிப்படைகள் குறித்து, அவர்களது மூலாதாரக் கோரிக்கைகளான தாயகம், தேசியம்  சுயநிர்ணய உரிமை குறித்து, உங்களது கட்சிகளின் கொள்கை நிலைப்பாட்டினை அதிகாரபூர்வமாகப் பகிரங்கப்படுத்துங்கள் என்றும் 

தென்னிலங்கை அரசியலரங்கில் தமிழரின் அடிப்படை அரசியல் அபிலாசைகள் குறித்துத் தெளிந்த பார்வையும் நேரிய தரிசனமும் ஒத்திசைவான நிலைப்பாடும் நிலவுமானால் எமது மக்களின் தேசிய இனப் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வுபற்றிப் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமுண்டு என்பதையும் தெளிவுபடுத்தி  இருந்தார் 

மேற்படி வரலாற்று உண்மைகளை எல்லாம் புறம் தள்ளி விட்டு புலிகளின் எள்ளளவும் விட்டுக் கொடாமை (intransigent) காரணமாக தான் சந்தர்ப்பங்கள் இழக்கப்பட்டதாக ஊடகவியாளர்களாக தங்களை அழைத்து கொள்ளும் சிலர் விதண்டாவாதம் பேசுகின்றார்கள் 

ஆனால், தனி நாட்டை மட்டுமே தீர்வாக புலிகள் தரப்பு பார்த்ததால் அமைதி முயற்சிகள் பலவும் தோல்வி அடைந்ததாக ஒரு சிலர் இன்றும் பிரச்சாரம் செய்கின்றார்கள் 

சரி , புலிகள் இயக்கம் அரசியல் அரங்கில் இருந்து அகற்றப்பட்டு 13 ஆண்டுகள் கடந்து விட்டது 

தமிழ் மக்களின் பிரதான அரசியல் சக்தியாக கருதப்படும்  தமிழ் கூட்டமைப்பு 18 சுற்று பேச்சுவார்த்தைகளை மஹிந்த ராஜபக்சே அரசாங்கத்தோடு நடத்தி இருந்தது 

அதே போல ரணில் விக்ரமசிங்கே அரசாங்கத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு எந்த நிபந்தனையும் இன்றி  இதயத்தால் இணைந்து நின்றதாக அறிவித்து இருந்தது 

இது மாத்திரமின்றி ரணில் விக்ரமசிங்கே அரசாங்கத்தோடு சிங்கப்பூர் முதல் தென்னாபிரிக்கா பல சுற்று இரகசிய பேச்சுவார்தைகளில் தமிழ் கூட்டமைப்பு கலந்து கொண்டது 

ஆனால் நடந்தது என்ன ? தமிழ் மக்களுக்கு கிடைத்த தீர்வு என்ன ? 

இன்று தமிழ் தரப்பில் சமஷ்டி என்று கதைத்தாலே அது intransigent என்று சொல்லுகின்றார்கள். தமிழ் தீவிரவாத நிலைப்பாடு என்று சொல்லுகின்றார்கள்  

ஆனால் தெற்கின் அரசியல் அன்றும் சரி இன்றும் சரி கட்சி வேறுபாடில்லாமல் ஒற்றையாட்சியில் உறுதியாக இருக்கின்றது. 

ஒற்றையாட்சியை intransigent என்று  மேற்குறித்த அரசியல் விற்பன்னர்கள் எப்போதுமே சொல்வதில்லை . சொல்லவும் மாட்டார்கள்

No comments