ஜேவிபி தனி வழி!காலிமுகத்திடல் போராட்டங்களில் அரசியல் கலக்க தடை செய்யப்பட்டுள்ள நிலையில் கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி தேசிய மக்கள் சக்தியால் பாதயாத்திரை முன்னெடுக்கப்படவுள்ளது என்று ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் சில்வா நேற்று அறிவித்தார்.

17ஆம் திகதி காலை 9 மணிக்கு களுத்துறை, பேருவளை நகரில் ஆரம்பமாகும் பாதயாத்திரை, 19 ஆம் திகதி கொழும்பை வந்தடையும் என வும் அவர் கூறினார். இது மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கான போராட்டம் என்பதால் அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

No comments