காலிமுகத்திடலில் கூட்டு பொங்கல்



 காலிமுகத்திடலில் தமது கூட்டு புத்தாண்டு பொங்கலை முன்னெடுத்துள்ளனர் போராட்டகாரர்கள்.

இதனிடையே நாடு முன்னொரு போதும் இல்லாத பெரும் அராஜக நிலைக்குள் தள்ளப்பட்டுள்ள சூழ்நிலையில் என்னால் எப்படி புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவிக்க முடியும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தனது முகநூலில் கேள்வி எழுப்பியுள்ளார்.

சுதந்திரத்திற்கு பின்னர் நாட்டின் அனைத்து குடிமக்களும் அனைத்து வேறுபாடுகளையும் புறக்கணித்து மழையையும் பொருட்படுத்தாமல் நாட்டின் முன்னேற்றத்திற்காக அமைதியான போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்-என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த போர் முழுவதும் வன்முறைக்கு பதில’ அமைதியையும் வெறுப்புக்கு பதில் அன்பையும் காண்போம் இந்தபோக்கின் மூலம் நாடு வெற்றியை பெற முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் எதிர்காலத்திற்காகத் தங்கள் இன்னுயிரை அர்ப்பணித்த குடிமக்கள் அனைவருக்கும், இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும், வளமும், ஆரோக்கியமும் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு, உங்கள் அனைவருக்கும் வளமும், வளமும் மிக்க புத்தாண்டாக அமையட்டும். இந்த நெருக்கடியை சமாளித்து அமைதி, சகவாழ்வு மற்றும் ஜனநாயகம் கொண்ட நாட்டை கட்டியெழுப்ப வேண்டும்.

என அவர் தெரிவித்துள்ளார்.

No comments