எரிபொருள் தட்டுப்பாடு மேலும் வலுவடையலாம்!

இலங்கையில் பெற்றோலிய போக்குவரத்தில் இருந்து இன்று புதன்கிழமை முதல் விலகவுள்ளதாக பெற்றோலிய போக்குவரத்து கொள்கலன் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் தற்போது நிலவும் பாதுகாப்பற்ற நிலையின் பின்னர் போக்குவரத்து நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் தீர்மானம் எடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தொழிற்சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே எரிபொருள் ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு இடையூறு விளைவிப்பதில் இருந்தும், சேதப்படுத்துவதிலிருந்தும் விலகிக் கொள்ளுமாறு இலங்கை காவல்துறையால் பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் தென்னிலங்கையில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் எரிபொருள் தாங்கிக்கு தீ வைக்க முற்பட்டபோதே நிகழ்ந்ததாக இலங்கை காவல்துறை விளக்கமளித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது. 


No comments