மாட்டோம்:சஜித்!கட்சிகளுக்கான ஜனாதிபதியின் அழைப்பை எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச நிராகரித்துள்ளார். ஜனாதிபதியை வீட்டுக்கு செல்லுமாறு கேட்டுள்ளார்.

 தற்போது பரபரப்பான அரசியல் மாற்றங்கள் இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில், அரசுக்கெதிரான ஆர்ப்பாட்டங்களும் இரவு பகலாக தொடர்ச்சியாக பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்று வருகின்றது.

புதிய அமைச்சரவையின் 4 அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றுக்கொண்டுள்ளனர்.

ஆளும் தரப்பு மட்டுமன்றி எதிர்த் தரப்பினரும் தற்போதைய நிலை தொடர்பில் விசேட கூட்டங்களை கூட்டி ஆராய்ந்து வருகின்றனர்.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியும் தற்போது விசேட கூட்டமொன்றை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நடாத்தி வருகின்றனர்.

இதேவேளை குறித்த விசேட கூட்டத்தில் பல முக்கியமான தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments