டக்ளஸ்:மறைந்திருந்தே பார்க்கும் மர்மமென்ன!



பல்கலைக்கழக சிங்கள மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட இன்றைய ஆர்ப்பாட்டத்தை தனது சிறீதர் திரையரங்க கோட்டையின் யன்னல் ஊடாக எட்டிப்பார்த்து பதுங்கிய டக்ளஸின் புகைப்படம் இன்று பேசுபொருளாகியுள்ளது.

மத்திய பேருந்து நிலையத்தில் போராட்டத்தை முன்னெடுத்த சிங்கள மாணவர்கள் டக்ளஸிடம் செல்ல திட்டமிட உடனடியாக காவல்துறை குவிக்கப்பட்டதுடன் ஈபிடிபி குண்டர்களும் குண்டாந்தடியுடன் தயாராகினர்.அதிலும் மற்றையவன் மனைவிக்காக கணவனை கொலை செய்த முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் கமலேந்திரன் குண்டாந்தடியுடன் பாதுகாப்பு வழங்க டக்ளஸ் மறைந்திருந்து பார்த்திருந்தார்.

இதனிடையே தற்போதைய அரசியல் போக்கை இவ்வாறு வர்ணித்துள்ளார் புலம்பெயர் ஊடகவியலாளர் குருபரன்.

கொலை வழக்கில் புலிகளுக்கு, தீவிரவாதத்திற்கு, பயங்கரவாதத்திற்கு பயந்து, அதி விசேட பாதுகாப்பு கோரியவர்கள் தங்கள் மக்களுக்கு பயந்து உயர் பாதுகாப்பு கோருகின்றனர்!

புலிகளுக்கு, தீவிரவாதத்திற்கு, பயந்து ஊருக்கு செல்ல முடியாதவர்கள், தம் வீடுகளில் இருக்க பயந்தவர்கள் – தம்மை தெரிவு செய்த மக்களுக்கு பயந்து அங்கு செல்ல முடியாது தவிக்கின்றனர்!

புலிகளுக்கு பயந்து வீதிகளில் இறங்க பயந்தவர்கள், தம் மக்களுக்கு பயந்து வீதிகளில் பயனிக்க முடியாது முடங்குகின்றனர்!

ஆளும் தரப்போடு இணைந்திருத்தல், பதவிகளில் அமர்ந்திருத்தல், அவர்களை ஆதரித்தல், துதி பாடல் எல்லாம் வாழ்வின் பெரும் பேறுகள் என நினைத்தவர்கள், மக்கள் கிளர்ச்சிகளால், அவவற்றை இரவோடு இரவாக தூக்கி எறிகின்றனர்!

நாட்டின் அனைத்து வீழ்ச்சிகளுக்கும், சுபீட்சம் இன்மைக்கும் - புலிகளும், மத அடிப்படை வாதமும் தான் காரணம் எனவும், தேசிய பாதுப்பே முதன்மையானது எனவும் அப்பாவி மக்களுக்கு கம்பு சுத்தியவர்கள் அதே மாவை அரைக்க முடியாது விழி பிதுங்க திணறுகின்றனர்!

வடக்கு கிழக்கு பல்கலைக்கழகங்களில் ஆட்சியாளர்களுக்கு எதிராக தமிழ் மாணவர்கள் போராடிய போது எள்ளி நகையாடியவர்கள், விமர்சித்தவர்கள், இப்போ அதே பல்கலைக் கழகங்களில் சிங்கள மாணவர்கள், சிங்கள சுலோகங்களை ஏந்தி, ஆட்சியாளர்களுக்கு எதிராக போராடும் போது திகைத்து நிற்கின்றனர்! 

ஆட்சியாளர்களுக்கு எதிராக வெளிப்படும், கருத்துகள், விமர்சனங்கள், போராட்டங்கள் அனைத்தையுமே, பயங்கரவாதம், முஸ்லீம் அடிப்படைவாதம், புலம்பெயர் புலித் தேசியவாதம், சர்வதேசத்தின் சதி என்ற சட்டகங்களுக்குள் புகுத்தி கடந்து சென்றவர்கள், மீண்டும் அதே பாணியிலான சுத்துமாத்து காரணிகளை முன்வைக்க முடியாது ஏங்கி நிற்கின்றர்!

புலம்பெயர்ந்த தமிழர்கள் - புலத்தில் வாழும் தம் உறவுகளுக்காக, புலம்பெயர் நாடுகளில் போராடியபோது அதனை பயங்கரவாதத்துடன் முடிச்சு போட்டவர்கள், புலிப் போராட்டங்கள் என வர்ணித்தவர்கள், இப்போ  லண்டனிலும், மெல்போனிலும் புலம்பெயர் சிங்கள மக்கள் அரசுக்கு எதிரான சுலோகங்களுடன் வீதியில் இறங்கிய போது மௌனித்திருக்கின்றனர்!

புராதன மன்னர்களாக தம்மை சித்தரித்த ஆளும் தரப்பின் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அவர்களின் நெருங்கிய ஆதரவு பிரமுகர்களின் வீடுகள் மக்களால் முற்றுகையிடப்படுகின்றன. அங்கு போராட்டங்கள் நடத்தப்படுகின்றன!

80களில் தேசிய விடுதலைப் போராட்டம் வீறு கொண்டெழுந்த போது, விடுதலை இயக்கங்களின் ஆதிகம் ஓங்கிய போது, விடுதலை இயக்கங்களுக்கும், மக்களுக்கும் பலர் பயப்படும் நிலை ஏற்பட்டது. அதனால்  தேசியக் கட்சிகளுக்கு வழங்கிய ஆதரவை உடனடியாக வாபஸ் பெறுகிறேன். உறுப்புரிமைகளில் இருந்து வெளியேறுகிறேன். அக்கட்சிகளில், வகித்த பொறுப்பகளில் இருந்து விலகுகிறேன் என தமது படங்களுடன் பத்திரிகைகளில் பலர் அறிக்கையை வெளியிடுவார்கள். அந்த ஞாபகங்கள் இப்போது வருகின்றன.  தமது மக்களுக்கு பதில் சொல்ல முடியாது, அவர்களை எதிர்கொள்ள முடியாது பலர் தமது பதவிகளில் இரந்து விலகுகின்றனர். ஆதரவை விலக்கிக் கொள்கின்றனர் என தெரிவித்துள்ளார்.


No comments