அமைச்சர் பதவியா? தலைதெறிக்க ஓடும் முன்னாள்கள்!காலியில் கோ ஹோம் கோட்டா ஆர்ப்பாட்டக்காரர்கள் அமைத்திருந்த கூடாரங்களை பொலிஸார் அகற்றியுள்ளனர்.

இதனிடையேஅரசாங்கத்தை நிர்வகிப்பதற்காக சிறிய அமைச்சரவையொன்றை நியமிக்கப்போவதாக ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச முன்னாள் அமைச்சர்களுடனான சந்திப்பின்போது தெரிவித்துள்ளார்.

நான் அரசமைப்பை பின்பற்றியே செயற்படுவேன் அதனை மீறி நடவடிக்கை எடுக்கமாட்டேன் என குறிப்பிட்டுள்ளார்.

நேற்றிரவு முன்னாள் அமைச்சர்கள் பலருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

நாடு நெருக்கடியை சந்தித்துள்ள நிலையில் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து நீண்டநேரம் ஆராயப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பலசிரேஸ்ட அமைச்சர்கள் தங்களிற்கு அமைச்சு பொறுப்பு வேண்டாம் என தெரிவித்துள்ளதுடன் இளையவர்களை நியமிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

No comments