ஆடெல்லாம் தீனிக்கு அலைய அம்பிகாவிற்கு வேறு கவலை!காலிமுகத்திடலில் தேசிய கீதம் தமிழில் பாடப்படுவதற்காக நான் காத்திருந்தேன் -ஆனால் கவலையளிக்கும் விதத்தில் அது இடம்பெறவில்லையென கவலை கொண்டுள்ளார் அம்பிகா சற்குருநாதன்.

இது சிறுபான்மையினத்தவர்கள் நாளாந்தம் எதிர்கொள்ளும் மீறல்களிற்கு ஒரு உதாரணம். மொழி உரிமை மீறல் என்பது தமிழர்கள் அன்றாடம் அனுபவிக்கும் தொடர்ச்சியான அமைதியான மீறல்.

ஏன் அதனை தமிழில் பாடவில்லை- சிங்களம் பேசாத எழுதாத வாசிக்காத மக்கள் உள்ளனர் என மக்கள் சிந்திப்பதில்லை என்பதே எனது அனுபவம்.

தமிழ் உத்தியோகபூர்வமொழி   என்பதை அவர்கள் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும்,மக்களால் தங்களால் சொந்தமொழியில் உரையாடமுடியாவிட்டால் அது அவர்களிற்கான சேவையை மறுக்கின்றது.

உதாரணத்திற்கு  நான் இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழுவில் நான் பல முறை சுட்டிக்காட்டிய போதிலும் எனக்கு சிங்களத்திலேயே ஆவணங்களை கையளித்தனர்.

இது பெரும்பான்மை மனப்பான்மை இயல்பானதாகவும் ஆழமாக வேரூன்றியதாகவும் இருப்பதை காண்பிக்கின்றது-

இழக்கப்பட்ட இன்னொரு தருணத்தை வேறு ஒன்றாக இது இருப்பதை தவிர்ப்பதற்காக இதனை சவாலிற்கு உட்படுத்தவேண்டும்.


No comments