நெடுந்தீவு:கடற்படை சிப்பாய் சடலமாக!காரைநகர்  கடல்பகுதியில் கடத்தல் படகுகளை விரட்டிய கடற்படையினரின் இரு படகுகள் மோதியதில் காணாமல்போன  கடற்படை சிப்பாய் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

காரைநகர்  கடற்பரப்பில்  சந்தேகத்திற்கிடமான படகை நேற்றைய தினம் விரட்டிய சமயம் விபத்திற்குள்ளான படகில் இருந்து  4 கடற்படையினர் கடலில் தவறி வீழ்ந்தபோது ஒருவர் காணாமல் போயிருந்தார்.

இவ்வாறு காணாமல்போன  கடற்படையினரை  தேடும்பணி  தொடர்ந்த நிலமையில் இன்று உயிரிழந்த நிலையில் சடலமாக  மீட்கப்பட்டு காங்கேசன்துறை கடற்படை தளம் ஊடாக பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு எடுத்து வரப்பட்டுள்ளது.

No comments