பொறுப்புக்கூறல்:வாய் திறந்த அமெரிக்க தூதர்!வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தங்;கள் அன்புக்குரியவர்களிற்கு என்ன நடந்தது என்பதை அறிவதற்கான உரிமை அனைவருக்கும் உள்ளதென இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார்.


இலங்கையில் யுத்தத்தின் போது தங்கள் குடும்ப உறுப்பினர்களை இழந்தவர்களின் மனதை வருத்தும் அனுபவத்தை யாழ்ப்பாணத்தில் நேரடியாக கேட்டறிந்தேன். பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்திற்கான அவசியத்தை நினைவுபடுத்தல் மிகமுக்கியமானதென உணர்வதாகவும் அமெரிக்க தூதர்; தெரிவித்துள்ளார்.


யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க தூதுவர் ஜீலி சங் இன்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது குடும்பங்களது அமைப்பு பிரதிநிதிகளை சந்தித்த பின்னரே பொறுப்புக்கூறல் பற்றி பிரஸ்தாபித்திருந்தார்.

No comments