பாலகுமாருக்கு மருத்துவபீடத்தில் அஞ்சலி யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் முன்னாள் பீடாதிபதியும், உயிர் இரசாயனவியல் துறையின் தற்போதைய தலைவருமாகிய மறைந்த பேராசிரியர்.ச.பாலகுமாருக்கு இறுதி மரியாதை செலுத்தும் வகையில் எதிர்வரும் 17 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, முற்பகல் 11 மணியளவில்  யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தினால் இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

நிகழ்வு குறித்து யாழ். பல்கலைக்கழக சமூகத்தினரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்கள் வருமாறு: (12) செவ்வாய்க்கிழமை அன்று அமரத்துவம் அடைந்த  பேராசிரியர்.ச.பாலகுமார் அவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் (17) ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணிக்கு மருத்துவபீட ஹூவர் கலையரங்கில் நடைபெறவுள்ளது. 

பேராசிரியரின் நேயத்துக்குரிய நண்பர்கள், மாணவர்கள், பல்கலைக்கழக சமூகத்தினர், கல்விச் சமூகத்தினர், சமூக ஆர்வலர்கள் அனைவரையும் காலக்கனதி மிக்க இவ் அஞ்சலி நிகழ்வில் கலந்து அமரர் பேராசிரியர் ச.பாலகுமாருக்கு இறுதிவணக்கம் செலுத்த உரிமையுடன் அழைக்கின்றோம்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments