வீடு செல்ல மகிந்த தயாராம்!

பிரதமர் மகிந்த ராஜபக்ச தான் பதவிவிலக  தயார் என பௌத்தமதகுருமார்களுக்கும் கட்சி தலைவர்களுக்கும் தெரிவித்துள்ளார் என உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.

பிரதமரின் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தும் சிலர் அவர் பதவி விலகுவதை தடுக்கின்றனர் என உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.

அவர்கள் அவ்வாறு தொடர்ந்தும் செயற்பட்டால் அவர்களின் பெயர்களை வெளியிடுவேன் என உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.

இதனிடையே ஜனாதிபதி பதவி விலகக் கோரி ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்துள்ள ஆர்ப்பாட்டப் பேரணி நாளை (26) கண்டியிலிருந்து ஆரம்பமாகவுள்ளது.

மே 1ஆம் திகதி இந்த ஆர்ப்பாட்ட பேரணி கொழும்பை வந்தடையவுள்ளது.

இன்று காலை எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த ஐ.ம.ச. பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ, வெள்ளை அல்லது கறுப்பு உடையில் பேரணியில்  பங்கேற்குமாறு மக்களைக் கேட்டுக்கொண்டார்.

பேரணி பயணிக்கவுள்ள பாதை வருமாறு

நாள் 1 - கண்டியில் இருந்து மாவனல்லை வரை

நாள் 2 - மாவனல்லையில் இருந்து கலிகமுவ வரை

நாள் 3 - கலிகமுவ முதல் தங்கோவிட்ட வரை

நாள் 4 - தங்கோவிட்டவிலிருந்து யக்கல வரை

நாள் 5 - யக்கலயிலிருந்து பேலியகொட வரை

No comments