யாழில் அமெரிகத் தூதுவர்: பல தரப்புடனும் சந்திப்பு!


யாழ்ப்பாணத்திற்கான பயணஒம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங், யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் வண. ஜஸ்டின் ஞானப்பிரகாசத்தை சந்தித்துள்ளார்.

அமெரிக்க தூதுவருடனான சந்திப்பில் தற்போதைய பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பல்வேறுப்பட்ட விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டதாக யாழ்ப்பாண ஆயர் வணக்கத்துக்குரிய ஜஸ்டின் ஞானப்பிரகாசம் தெரிவித்தார்.

அதேநேரம், அமெரிக்க தூதுவர் ஜூலி சங் இன்று காலை நல்லூர் ஆலயத்திலும் வழிபாடுகளில் ஈடுபட்டார்.

பலாலி சர்வதேச விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணத்துக்கு நேற்று விஜயம் மேற்கொண்ட இலங்கைக்கான அமெரிக்க தூதுவர், பல தரப்பினரை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

அவர் இன்றைய தினம் அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் சந்திக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
No comments