தமிழ் மக்கள் முதுகில் மருத்துவர்களும் குத்தினர்!

 


மோசமான பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களிடமிருந்து சுரண்டுவதில் முன்னணி மருத்துவர்களும் மும்முரமாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக குற்றஞ்சுமத்தியுள்ளது தமிழ் தேசிய பண்பாட்டுப்பேரவை.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட தமிழ் தேசிய பண்பாட்டுப்பேரவையின் இணைப்பாளர் நிசாந்தன் மேலும் கருத்து வெளியிடுகையில் முன்னணி மருத்துவர்கள் தமது தனியார் மருத்துவ தரிசிப்பு கட்டணங்களை தற்போது தன்னிச்சையாக அதிகரித்துள்ளனர்.

முன்னதாக தரிசிப்பு கட்டணமாக ரூபா ஆயிரமும் நிறுவன கட்டணமாக 350 ரூபாவும் பெறப்பட்டது.

ஆனால் தற்போது எந்தவித முகாந்தரமுமின்றி தமது தரிசிப்பு கட்டணத்தை ரூபா1500 என அதிகரித்துள்ளனர்.

ஏற்கனவே மக்கள் அன்றாட உணவிற்காக அலைந்து திரிந்துவருகின்றனர்.

ஆனால் அரசிடமிருந்து மாதாந்தம் இரு இலட்சத்திற்கும் மேற்பட்ட சம்பளத்தை பெற்றுக்கொண்டுள்ள மருத்துவர்கள் அதனை விட அதிகமாக தனியார் வைத்தியசாலையில் பெற்றுக்கொள்ளும் மருத்துவர்கள் அதனை தாண்டி தரிசிப்பிற்காக அறவிடும் கட்டணத்தை கூட அதிகரித்துள்ளது நியாயமற்றதென மேலும் தெரிவித்துள்ளார்.


No comments