உக்ரைனில் இதுவரை 636 பேர் உயிரிழப்பு - ஒ.எச்.சி.எச்.ஆர்


உக்ரைன் - ரஷ்ய போரில் மார்ச் 13 ஆம் திகதி வரை 46 குழந்தைகள் உட்பட 636 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என  ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கார்கிவ் மற்றும் மரியுபோல் பகுதிகளில் கடுமையான மோதல்கள் இடம்பெற்று வரும் பிரதேசங்களிலிருந்து தகவல்கள் பெறுவது தாமதமாகவால் உயிரிழப்புகள் அதிகமாக இருக்கலாம் என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அலுவலகம் தெரிவித்தது.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அலுவலகதின் மனித உரிமைகள் கண்காணிப்பில் 50 பேர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றது என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

No comments