அரசிற்கு எதிராக ஈபிடிபி போராட்டம்!



யாழ். மாவட்ட செயலக அதிகாரிகள் ஒரு பக்கசார்பாக செயற்படுவதாக எதிர்ப்பு தெரிவித்து அரசின் பங்காளிகளான ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் போராட்டமொன்றை நடத்தியுள்ளனர்.

யாழ். மாவட்ட செயலக வாயிலை மூடி மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களிற்கு முன்னாள் கொலைஞர்களுள் ஒருவரான ஜீவன் என்பவர் தலைமை தாங்கியிருந்தார்.

போராட்டத்தில் கட்சி தலைவர்கள் பங்கெடுக்காத போதும் இரண்டாம் மட்ட தலைவர்கள் பங்கெடுத்திருந்தனர்.குறிப்பாக ஈ.பி.டி.பி கட்சியின் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் ஈ.பி.டி.பி கட்சியின் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.


No comments