வாசுவும் திருப்பி வழங்கினார்!இலங்கை  அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தனக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் உத்தியோகபூர்வ வாகனங்களை கையளித்துள்ளதாக நீர் வழங்கல் அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

விமல் வீரவங்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோரின் அமைச்சு பதவிகள் ஜனாதிபதியினால் மீளப் பெற்றுக்கொண்டதை அடுத்து, வாசுதேவ நாணயக்கார தனது அமைச்சு பொறுப்புக்களை முறையாக செய்ய போவதில்லை என்றும், அமைச்சரவை கூட்டத்திற்கு செல்லப்போவதில்லை என்றும் முன்னர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments