நினைத்தபடி செய்யமுடியாது:யாழ்.மாவட்ட செயலர்!

யாழ். மாவட்ட மக்களின் அபிவிருத்தியில் மாவட்ட செயலகம் எழுந்தமானமாக முடிவுகளை எடுத்துச் செயற்படுத்த முடியாது என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

''யாழ் மாவட்ட செயலகத்தின் கீழ் உள்ள ஒவ்வொரு பிரதேச செயலக ரீதியாக பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

சில அபிவிருத்தித் திட்டங்கள் மக்கள் விருப்பத்துடனான முன்னுரிமைப் படுத்தப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களாகப் பிரதேச செயலகங்கள் ஊடாக தெரிவுசெய்யப்பட்டு மாவட்ட செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

மக்களுக்கான அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ளும் போது சுற்று நிருபங்களுக்கு மாறாக எழுந்தமானமாகச் செயற்படுத்த முடியாது.

ஆகவே குற்றச்சாட்டுகளை முன் வைப்போர் ஆதாரங்களுடன் முன்வைத்தால் அதனைச் சரி செய்வதற்குத் தயாராக இருக்கிறோம்'' No comments