முன்னணி முதுகில் குத்துகிற்து!

 தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில், யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையம் முன்றலில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிவேண்டும், அரசியல் கைதிகளை நிபந்தனை இல்லாமல் விடுதலை செய்ய வேண்டும், தமிழின படுகொலைக்கான சர்வதேச நீதி வேண்டும் மற்றும் பயங்கரவாத தடை சட்டத்தை நீக்கு போன்ற கோரிக்கைகளை முன்வைத்தே,கவனயீர்ப்பு முன்னெடுக்கப்பட்டது.

கவனயீர்ப்பு போராட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளர் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.

இதனிடையே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தமது சுயநல அரசியலிற்காக எமது அமைப்பின் பெயரை பயன்படுத்தி யாழிலும், மட்டக்களப்பிலும் மீண்டும் குழப்பகரமான  போராட்டங்களை முன்னெடுத்து தொடர்ந்தும்  மூக்குடைபட்டு வருகின்றதென வடக்கு கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தமது சுயநல அரசியலிற்காக பாதிக்கப்பட்ட மக்களின் போராட்டங்களை சிதைத்து கட்சி இலாபம் தேடி வருகின்றதெனவும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பின் வடக்கு,கிழக்கு மாகாணங்களின் பணிப்பாளர் கருணாவதி பத்மநாதன் இன்றைய தினம்  ஊடகங்களுக்கு அனுப்பி வைத்த செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார் 


அந்த செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது


தமது வங்குரோத்து அரசியலை நிமிர்த்துவதற்காக கடந்த காலங்களில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் செயற்பட்டு வந்ததாகவும்


இந்த நிலையில் எமது போராட்ட அமைப்பின் பெயரை பயன் படுத்தி இலங்கை ஒற்றையாட்சி பாரளமன்ற கதிரைகளுக்கு வெள்ளையடித்து புலி   நீக்க அரசியலை   முன்னெடுக்க முயல்வதாகவும் அவர்களால் கடுமையாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தேர்தல் வெற்றிக்கு முன்னர் சரிந்து கிடந்த அரசியல் நிலையை மீள கட்டியெழுப்புவதற்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை பயன்படுத்தியும், அவர்களது உணர்வுகளை பயன்படுத்தி வருவதாகவும் கடுமையாக அவர்கள் சாடியுள்ளனர்.


இந்த நிலiயில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பு வடக்கு,கிழக்கில் மாபெரும் மக்கள் போராட்ட அணியாகவும், ஐ.நா மனித உரிமைப் பேரவையுள்ளிட்ட சர்வதேச சமூகத்தின் ஊடாக எமது அமைப்பு கடுமையான கருத்தியல் ரீதியான தொடர்பில் பலமடைந்துள்ள நிலையில் அதற்கு தொடந்து தமிழ் தேசிய மக்கள் முன்னணி தங்களது கட்சி சாயத்தை பூசி தமக்கு வெள்ளையடிக்க முனைகின்றனர் .இந்த போக்கை தமிழ் ஊடகவியலாளர்  அனைவரும் கவனத்தில் கொண்டு செயற்பட வேண்டும். 


போலியான அரசியல் தலைமைக்கு வாக்களித்தமையையிட்டு மக்கள் தலைகுனிய வேண்டிய நிலைக்கு இவர்களின் செயற்பாடு தற்போது காணப்படுவதாகவும், சுய இலாப அரசியலுக்காகப் போரால் பாதிக்கப்பட்ட மக்களின் செயற்பாட்டை சிதைக்கும் இவர்களின் செயற்பாடுகள் மிகவும் கண்டிக்கப்படவேண்டியவை 


சக கட்சி உறுப்பினரின் வாக்கை கொள்ளையடித்து வெட்கமின்றி அரசியல் செய்யும்  இவர்களை மக்கள் அறிந்து செயற்பட வேண்டும் என அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது


No comments