மீண்டும் எரிவாயு பிரச்சினை!



இலங்கை டொலர் நெருக்கடிக்கு முகங்கொடுத்து வரும் நிலையில், வர்த்தக வங்கிகளால் கடனுதவி வழங்கப்படாமையால் மூன்று எரிவாயு தாங்கிகள் இலங்கை கடற்பரப்பில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளதால் நாடு தற்போது கடும் எரிவாயு தட்டுப்பாட்டுக்கு முகங்கொடுத்துள்ளது.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளைச் சேர்ந்த மக்கள் அந்தந்தப் பகுதிகளில் எரிவாயு தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவித்துள்ளனர்.

பற்றாக்குறையால், தொழிற்சாலைகள் மற்றும் பெரிய அளவிலான ஹோட்டல்கள் , பேக்கரிகளின் செயற்பாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. எரிவாயு பற்றாக்குறையால் சுமார் 1000 பேக்கரிகள் ஏற்கனவே தமது செயற்பாடுகளை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.

இதேவேளை, இலங்கை வர்த்தக வங்கிகளினால் கடனுதவி வழங்கப்படாமையால் கடந்த 6 நாட்களாக இலங்கை கடற்பரப்பில் மூன்று எரிவாயு தாங்கிகள் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை, எரிவாயு தட்டுப்பாட்டைக் கண்டித்து கடந்த சில நாட்களாக நாட்டின் சில பிரதேசங்களில் பொதுமக்கள் பல போராட்டங்களை முன்னெடுத்து இருந்தனர்.

No comments