புதிய கூட்டு:பங்காளிகள் தயாரிப்பில்!அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட பின்னர் பிரமதமர் மகிந்த ராஜபக்சவை சந்திக்கவில்லை என உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.

தன்னை சந்திக்க வருமாறு பிரதமர் அழைப்பு விடுக்கவில்லை தான் அவரை சந்திக்கவில்லை என  உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.

பிரதமர் தன்னை வந்து சந்திக்குமாறு உதயகம்மன்பிலவிற்கும் விமல்வீரவன்சவிற்கும் அழைப்புவிடுத்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனிடையே இலங்கை மக்களின் நாளாந்த வாழ்க்கையை பாதித்துள்ள பொருளாதார எரிபொருள் உணவு நெருக்கடிக்கு அப்பால் கடந்த வாரம் இரண்டு அமைச்சர்கள் பதவி விலக்கப்பட்டதை தொடர்ந்து அரசாங்கத்தின் 11 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகப்போவதாக தெரிவித்துள்ளதால் புதிய அரசியல் நெருக்கடி உருவாகியுள்ளது.

விமல்வீரவன்ச உதயகம்மன்பில பதவி நீக்கப்பட்டமை அரசாங்கத்தின் நாடாளுமன்றஉறுப்பினர்கள்மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது,முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சர் வாசுதேவ நாணயக்கார உட்பட 11 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திலிருந்து விலகப்போவதாக எச்சரித்துள்ளனர்.

அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட இருவரையும் மீண்டும் உள்வாங்கும் எண்ணம் எதனையும் வெளிப்படுத்தாத ஜனாதிபதி தற்போதைய அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட முடியாதவர்களிற்கும் அரசாங்கத்திற்கு எதிராக செயற்படுபவர்களிற்கும் இடமில்லை என தெரிவித்துள்ளார்.

11 அதிருப்தியாளர்களுடன் எந்த பேச்சுவார்த்தைகளையும் அவர் மேற்கொள்ளாத அதேவேளை தற்போது ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவை  உள்ளடக்கிய  அரசாங்கத்தை அமைக்கலாமா என்பது குறித்து கவனம்திரும்பியுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும் தற்போதைய குழப்பநிலைக்கு தீர்வை காண்பதற்கான முயற்சிகளில் பிரதமர் ஈடுபட்டுள்ளார்.

வியாழக்கிழமை உதயகம்மன்பில் விமல்வீரவன்ச பதவி நீக்கப்பட்டதை தொடர்ந்து 11 அதிருப்தியாளர்களையும்  அலரிமாளிகைக்கு வந்து தன்னை சந்திக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்

இது; இன்னொருநெருக்கடிக்கான தருணமில்லை என அதிருப்தியாளர்களிற்கு தெரிவித்துள்ள அவர் அரசியல் வேறுபாடுகளை கைவிடுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

எனினும் பிரதமர் வெள்ளிக்கிழமை பலமணிநேரம் காத்திருந்த போதிலும் அதிருப்தியாளர்கள் எவரும் பிரதமரை சந்திக்கசெல்லவில்லை

பிரதமரின் அரசியல் வாழ்க்கையில் இவ்வாறானதொரு அனுபவத்தை அவர் சந்தித்தது முதல் தடவை.

இதேவேளை 11 அதிருப்தியாளர்களும் ஏன் பிரதமரை சந்திக்கவரவில்லை என பிரதமருக்கு நெருக்கமான  அமைச்சர்கள் கேள்வி எழுப்பியவேளை உதயகம்மன்பில  தங்களை பிரதமரைசந்திக்க செல்லவேண்டாம் என அழுத்தம் கொடுத்தார் என அவர்கள் தெரிவித்தனர் என டெய்லி மிரர் தெரிவித்துள்ளது.

இதனை அவர்கள் மகிந்த ராஜபக்சவிற்கு அறிவித்துள்ளனர்,இதன் பின்னரே பிரதமர் தற்போதைய பொருளாதார எரிபொருள் நெருக்கடிக்கு முதலில் தீர்வை காணவேண்டும், மக்களிற்கு நிவாரணத்தை வழங்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.

No comments