வெள்ளவத்தையிலிருந்து வடக்கிற்கு புகையிரதம்!


வெள்ளவத்தையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு புதிய ரயில் சேவை ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கை புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி வெள்ளவத்தையில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு 10 மணிக்குப் புறப்படும் புகையிரதம் சனிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு யாழ்ப்பாணத்தைச் சென்றடையும்.

பின்னர் யாழ்ப்பாணத்தில் இருந்து திங்கட்கிழமை அதிகாலை 5 மணிக்கு சேவை மீண்டும் ஆரம்பமாகும் என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் குறித்த புகையிரதத்தில் சுமார் 530 பேர் வரை பயணிக்க முடியும் என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

No comments