மக்கள் வெளியேற 5 நகரங்களில் தற்காலிக போர் நிறுத்தம்: ரஷ்யா அறிவிப்பு


உக்ரைனின் கீவ், கார்கிவ், மரியுபோல், சுமி நகரங்களில் இருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கு வசதியாக அங்கு தற்காலிக போர்நிறுத்தத்தை ரஷ்யா அறிவுத்துள்ளது.

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானின் கோரிக்கையை ஏற்று, மனிதாபிமான முறையில் மாஸ்கோ நேரப்படி காலை 10 மணியில் இருந்து தற்காலிமாக போர் நிறுத்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. 

ரஷ்யா - உக்ரைன் பிரதிநிதிகள் இடையிலான 3-வது கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெறவுள்ள நிலையில் ரஷ்யா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

No comments