மெட்டாவை இழுத்து மூடவேண்டி வரும் - ரஷ்யா எச்சரிக்கை


ரொய்ட்டரில் வெளிவந்த இந்த அறிக்கை உண்மையாக இருந்தால் ரஷ்யாவில் மெட்டா பணியை நிறுத்த வேண்டியிருக்கும் என்று கிரெம்ளின் எச்சரித்துள்ளது.

ரஷ்யர்கள் மற்றும் ரஷ்ய வீரர்களுக்கு எதிராக கருத்துக்கள் வன்முறைக்கு அழைப்பு விடுக்க சில நாடுகளில் சமூக ஊடக தளங்களைப் பயன்படுத்துபவர்களை அனுமதிக்கும் இந்த அறிக்கை உண்மையாக நிரூபிக்கப்பட்டால் ரஷ்யாவில் உள்ள மெட்டாவின் அனைத்து செயற்பாடுகளையும் மொஷ்கோ நிறுத்தும் என்று கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர்  தெரிவித்துள்ளார்.

கசிந்த உள் மின்னஞ்சல்களை மேற்கோள் காட்டி, உக்ரைன் படையெடுப்பின் பின்னணியில் ரஷ்யர்கள் மற்றும் ரஷ்ய வீரர்களுக்கு எதிரான வன்முறைக்கு அழைப்பு விடுக்க சில நாடுகளில் உள்ள பேஸ்புக் மற்றும் இன்ரகிராம் பயனாளர்களை மெட்டா அனுமதிக்கும் என்று ரொய்ட்டர்ஸ் வியாழனன்று தெரிவித்துள்ளது

No comments