பாணில்லையா? திராட்சைசாப்பிடவும்!


 

கிணறு திறப்பு விழா , மலசல கூட அடிகல்  நாட்டு விழா தொடங்கி மாட்டு கொட்டகை திறப்பு விழா மாயனங்களுக்கு திறப்பு விழா விரிந்த  இலங்கை அரசின்அபிவிருத்தி திருவிழாவில் அரச செலவில் நடைபெற்ற  திராட்சை பழ திறப்பு விழா பற்றிய செய்தி வெளியாகியுள்ளது. 

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர்  சார்பில் அவரின்  மச்சான்  பழங்களை வெட்டி சிறப்பித்தார் என சமூக ஊடக தாக்கிவருகின்றன.

மறுபுறம் மாவு நிறுவனங்கள், ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை இன்று  முதல் உயர்த்தியதன் காரணமாக, பாணின் விலை உட்பட அனைத்து பேக்கரி பண்டங்களின் விலைகளையும் அதிகரிக்க பேக்கரி உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளனர் .

மாவு வழங்கும் பிரதான நிறுவனங்கள் இன்று முதல் விலையை ரூ. கிலோவுக்கு 38 ரூபாவால் அதிகரித்துள்ளன. இதனால் பேக்கரி பொருட்களின் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் அனைத்துப் பொருட்களின் விலைகளும் கடுமையாக அதிகரிக்கப்படும்.

எனவே, இன்று இரவு முதல் பாண் உட்பட அனைத்து பேக்கரி பண்டங்களின் விலைகளையும் அதிகரிக்க சங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, பாண் (450 கிராம்)ஒன்றின்  விலை 20 ரூபா முதல் 30 ரூபாவுக்கிடையிலும் பணிஸ் ஒன்றின் விலை 10 ரூபாவாலும் அதிகரிக்கப் படவுள்ளன.

No comments