காணி உரிமையாளர் மீது தாக்குதல்: உந்துருளி எரிப்பு


யாழ். கொடிகாமம் பகுதியில், காணிக்குள் அத்துமீறி நுழைந்து மணல் கொள்ளையில் ஈடுபட்ட நபர்களை தடுக்க சென்ற காணி உரிமையாளர் மீது தாக்குதல் நடத்திவிட்டு அவரது உந்துருளியை எரித்துவிட்டு தப்பியோடியுள்ளனர். 

கொடிகாமம் பாலாவி தெற்கு கடற்கரை பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றுக்குள் அத்துமீறி நுழைந்த மணல் கொள்ளையர்கள் , காணிக்குள் மணல் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். 

இதனை அறிந்த காணி உரிமையாளர் மணல் கொள்ளையை  தடுக்க சென்ற போது , கொள்ளையர்கள் காணி உரிமையாளரை தாக்கிவிட்டு அவரது உந்துருளியையும் தீ மூட்டி எரிந்து விட்டு அங்கிருந்து சென்றுள்ளனர். 

தாக்குதலுக்கு இலக்கான காணி உரிமையாளர் சிகிச்சைக்காக சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

சம்பவம் தொடர்பில் கொடிகாம காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதுடன் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

No comments