டக்ளஸ் செலுத்த வேண்டியது கோடிக்கணக்ககில் !இலங்கை மின்சாரசபைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா 97 இலட்சம் மின்நிலுவையை வைத்துள்ளார்.

இவ்வாறான அமைச்சர்களால் எவ்வாறான நேர்மையான அரசை நடாத்த முடியுமென மக்கள் விடுதலை முன்னணியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் சந்திரசேகரன்  தெரிவித்தார்.

யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர் ராஜ பக்சக்களின் தூரநோக்கமற்ற செயற்பாடு காரணமாகவே நாடும் நாட்டு மக்களும் பாதிப்பை சந்தித்துள்ளனர். நிதி நிலைமைகள் மிக மோசமாகவுள்ளது  இந்த நாட்டை கறுப்பு பண வியாபாரிகளுக்கான கறுப்புச் சந்தையாக மாற்றுவதற்கே எத்தனித்துள்ளார்கள்.  இந்த நாட்டை மேலும் சூறையாடுவதற்கே இவர்கள் இந்த முயற்சிகளை செய்து வருகின்றார்கள்.

  ஜனாதிபதியாக கோத்தபய ராஜபக்ச எப்போது ஆட்சிக்கு வந்தாரோ அன்றிலிருந்து இந்த நாட்டுக்கு விமோசனமே இல்லை. நாட்டை அபிவிருத்தி செய்ய மூன்றில் இரண்டு பெரும்பான்மை வேண்டும் எனக் கேட்டவர்கள் இன்று நாட்டையும் நாட்டு மக்களையும் பாதாளத்துக்குள் தள்ளிவிட்டுள்ளார்கள்.இவர்களது தூர நோக்கற்ற செயற்பாடு காரணமாக மக்கள் எதற்கெடுத்தாலும் வரிசையில் நிற்கவேண்டிய நிலையுள்ளது எனவும் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.


No comments