புடின் அதிகாரத்தில் நீடிக்கக்கூடாது - அமெரிக்கா: பிடன் இதை தீர்மானிக்க முடியாது - ரஷ்யா


கடவுளின் பொருட்டு இந்த நபர் அதிகாரத்தில் நீடிக்கக்கூடாது என அமெரிக்க அதிபர் ஜோ பிடன் குறிப்பிட்டுள்ளார்.

போலத்திற்கு பயணம் செய்த ஜோ பிடன் நேட்டோ நாடான போலாந்துக்கு சென்றுள்ள ஜோ பைடன் அமெரிக்க வீரர்கள் மற்றும் நேட்டோ படையில் உள்ள வீரர்கள் மத்தியில் பேசினார். 

அங்கு அவர் பேசும்போது:-

கடவுளின் பொருட்டு இந்த நபர் அதிகாரத்தில் நீடிக்கக்கூடாது என ரஷ்ய அதிபர் புடினை குறிப்பிட்டு ரஷ்ய மக்களுக்கு வேண்டுகோளை விடுத்தார்.

அத்துடன் ரஷிய அதிபர் புதின் ஒரு போர் குற்றவாளி. அவர் பலரை இறக்கமின்றி கொல்பவர். புடினை ஒரு கசாப்புக் கடைக்காரன். ஒரு சர்வாதிகாரி என்று குறிப்பிட்டார்.

நேட்டோ அமைப்பில் பிளவை ஏற்படுத்த விளாடிமிர் புதின் முயற்சிக்கிறார். ஆனால், அவரால் அது முடியவில்லை. நாம் அனைவரும் ஒன்றாக உறுதுணையாக உள்ளோம். உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்த போரின் திட்டம் தோல்வியடைந்துள்ளது என்றார்.

இந்த உரைக்கு பின்னர் அமெரிக்க ஜனாதிபதி ஆட்சி மாற்றத்திற்கு அழைப்பு விடுக்கவில்லை என்று வெள்ளை மாளிகை பின்னர் மறுத்தது.

அமெரிக்  அதிபரின் கருத்துக்கு கிரேம்ளின் பதிலளித்துள்ளது. இதுகுறித்து கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் தெரிவிக்கையில்:-

புடினை ஆட்சியில் இருக்கக்கூடாது என்று அமெரிக் அதிபர் ஜோ பிடன் முடிவு செய்ய முடியாது. அதை ரஷயர்ளே தீர்மானிப்பார்கள். ரஷ்யாவின் அதிபரை ரஷ்யர்களே தேர்ந்தெடுத்தனர் என்றார்.

No comments