அமெரிக்காவைத் தாக்கும் ஏவுகணை சோதனை! ஹொலிவுட் பாணியில் காணொளி வெளியிட்டது வடகொரியா!

அமெரிக்காவைத் தாக்கும் பலம் பொருந்திய புதிய ஹவாசோங் 17 வகை ஏவுகசணையை கிம் ஜாங் அன்னின் மேற்பார்வையில் வெற்றிகரமாக வடகொரியாவால் சோதிக்கப்பட்டது. 

இச்சோதனை குறித்த காணொளி ஒன்றையும் வடகொரியா வெளியிட்டுள்ளது. அக்காணொளி ஹொலிவுட் பட பாணியில் இருப்பதாக மேற்கு ஊடகங்கள் கருத்து வெளியிட்டுள்ளன.

சோதனையின் போது கிம் ஜாங் அன் கருப்பு நிற உடை மற்றும் கருப்பு நிற கண்ணாடியை அணிந்து படைத் தளபதிகள் சகிதம் நடந்துவருகிறார். அவருக்கு பின்னால் பிரமாண்ட ஏவுகணை இராணுவ வாகனத்தில் எடுத்து வரப்படுகிறது. பின்னர் கிம் ஜாங் அன் தனது கைக்கடிகாரத்தை பார்த்து நேரத்தை எண்ணுகிறார்.அதை தொடர்ந்து ஏவுகணை நெருப்பை கக்கியப்படி விண்ணை நோக்கி சீறிப்பாய்கிறது.

ஏவுகணை சோதனை வெற்றியடைந்த பிறகு கிம் ஜாங் அன் இராணுவ வீரர்களுக்கு மத்தியில் சிரித்தபடியே நடந்து வருவதுபோல் வீடியோ முடிகிறது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. No comments