இன்றிரவு இந்திய டீசல் வருகிறதாம்!இந்திய கடனுதவின் கீழ் இலங்கைக்கு கிடைக்கப்பெறும் டீசல் தொகையின் முதல் தொகுதி அடங்கிய கப்பல் இன்றிரவு நாட்டை வந்தடையவுள்ளது. அதில் 35,000 மெற்றிக் டொன் டீசல் அடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதில் 20,000 மெற்றின்டொன் கொலன்னாவை களஞ்சியசாலைக்கும் ஏனைய 15,000 மெற்றிக் டொன் முத்துராஜவெல களஞ்சியசாலைக்கும் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கமைய கொலன்னாவையில் களஞ்சியப்படுத்தப்படவுள்ள டீசல், தொடருந்து ஊடாக நாட்டின் பல பகுதிகளுக்கு பகிரப்படவுள்ளது.

முன்னர் நாளொன்றுக்கு 5,000 மெற்றிக் டொன் டீசலுக்கான தேவை இருந்த நிலையில் தற்போது அந்த தொகை 8,400 மெற்றிக் டொன்னாக அதிகரித்துள்ளது.

மக்கள் தேவையற்ற விதத்தில் டீசலை சேமிப்பதனால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை கனியவள கூட்டுதாபனம் தெரிவித்துள்ளது.

அத்துடன் எதிர்வரும் 2 நாட்களில் எரிபொருள் நிரப்பு நிலையங்களை அண்மித்து காணப்படும் மக்களின் வரிசையை குறைக்க முடியும் எனவும் இலங்கை கனியவள கூட்டுதாபனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது

No comments