மகிந்தவை மறிப்பதா:முறுகும் ஈழ சிவசேனை!இந்து –கத்தோலிக்க மோதலை தூண்டுவிப்பதில் முன்னிற்னும் ஈழம் சிவசேனை இனக்கொலையாளி மகிந்தவின் நல்லூர் ஆலய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள வேலவன் சுவாமிகளை கண்டித்துள்ளது. 

பிரதமர் மகிந்த நல்லூர்க் கந்தசாமி கோவிலுக்கு வந்து வழிபடக் கூடாது என்று வேலவன் சுவாமி தடுக்கிறார் .போராட்டம் நடத்துகிறார்.இந்துக் கோயில்கள் சாத்தான் கோயில்கள் என்ற கொள்கை உடையோர் சைவக் கோயிலில் வழிபடுவதை தடுப்பர் .

ஆனால் சைவத் துறவி வேலன் சுவாமிகள் நல்லூர் முருகனை வழிபடும் வரும் அடியவரைத் தடுக்கிறார்.கொடுமையிலும் கொடுமை.சைவ உலகம் இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது.முகமதியரே பள்ளிவாயிலுக்கு செல்க,கிறித்தவரே தேவாலயத்துக்கு செல்க,புத்தரே விகாரைக்குச் செல்க இவ்வாறு அவரவர் கோயிலுக்கு அவரவர் செல்லுங்கள் என்று சொல்லும் மாபெரும் பண்பாட்டு மரபு சைவ மரபு.

கதிர்காமத்திற்குச் சென்று கைகூப்பி வழிபடும் மகிந்தர் நல்லூருக்கும் வந்து வந்து வழிபட விழைகிறார். தடுக்கலாமா? புத்தருக்கும் சைவருக்கும் இடையே மோதலை ஏற்படுத்த முயலும் வேலன் சுவாமிகள் தம் கனவுகளை நனவாக்கக் கடைந்தெடுத்த கேவலத்தைச் சைவ சமயத் துறவியாக இருந்து கொண்டு அவர் செய்ய முடியாதென அதற்கு விளக்கமளித்துள்ளார்.


No comments