இலங்கையில் கொலையாளிகள் சிவில் நிர்வாகத்தில்!



பொறுப்புக்கூறலை முன்னெடுப்பது தொடர்பில் இலங்கை அரசாங்கம் தனக்குள்ள விருப்பத்தை வெளிப்படுத்தவில்லை என தெரிவித்துள்ள ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் மிச்செலே பச்செலெட் பொறுப்புக்கூறலை முன்னகர்த்துவதற்கு அவசியமான சர்வதேச மூலோபாயங்களை  மனித உரிமை பேரவை முன்னெடுக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதேவேளை  தற்போதைய அரசாங்கம் பொறுப்புக்கூறல் தொடர்பில் தனது விருப்பமின்மையை வெளிப்படுத்தியுள்ளதுடன் யுத்த குற்றங்களில் ஈடுபட்டனர் என குற்றம்சாட்டப்பட்ட சிரேஸ்ட அதிகாரிகளை அரசாங்கத்திற்குள் உள்வாங்கியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படுதலை முடிவிற்கு கொண்டுவருவதற்கும் கடந்த கால மீறல்கள் மீண்டும் நிகழாமலிருப்பதை உறுதிப்படுத்துவதற்கும் அவசியமான ஆழமான நீதி ஸ்தாபன மற்றும் பாதுகாப்பு துறை சீர்திருத்தங்களை இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும் என மனித உரிமை ஆணையாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சிவில் நிர்வாக பதவிகளிற்கு இராணுவ அதிகாரிகளை நியமிப்பது குறித்து நான் ஆழ்ந்த கவலை அடைந்துள்ளேன்,இவர்களில் சிலர் மோசமான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளிற்கு உள்ளானவர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

No comments