பாடசாலைகளை திறக்க டீசல் வேண்டும்!இலங்கையில் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு முன்னர் எரிபொருள் பிரச்சினைகளிற்கு தீர்வை காணவேண்டும் என இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வை காணாமல் அரசாங்கம் 7ம் திகதி பாடசாலைகளை திறப்பதால் மாணவர்களும் பெற்றோரும் நெருக்கடிக்குள்ளாவார்கள் இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

டீசல் இல்லாததால் பாடசாலை பேருந்துகள் வான்களை இயக்க முடியாது என தெரிவித்துள்ள சங்கம் எரிபொருள் நெருக்கடியால் பொதுப்போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளது.

பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பு குறித்து கடும் கரிசனைகள் உள்ளன கல்வி அதிகாரிகளுடன் இது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்ற போதிலும் தீர்வுகள் முன்வைக்கப்படவில்லை என சங்கம் தெரிவித்துள்ளது.

No comments