ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் முறுகிறது!



கூட்டிலிருந்து அமைச்சர்கள் விமல்வீரவன்சவையும் உதயகம்மன்பிலலையும் அமைச்சரவையிலிருந்து நீக்கும் முடிவிற்கு மற்றொரு பங்காளி கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.

கட்சியின் சிரேஸ் உபதலைவர் ரோகணஸக்ஸ்மன் பியதாச இதனை தெரிவித்துள்ளதுடன் கட்சி மக்கள் போராட்டத்தை முன்னெடுக்க தயார் என குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளை தீர்ப்பதற்கு அவசியமான திருத்தங்களை முன்வைப்பதற்காகவே 11 அரசியல் கட்சிகள் அரசியல் நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருந்தன என தெரிவித்துள்ள அவர் இந்த நிகழ்வு காரணமாக இரு அமைச்சர்களும் பதவி விலக்கப்படும் நிலை உருவானது ஏமாற்றத்தை அளிக்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.

அந்த சந்திப்பில் தெரிவிக்கப்பட்ட விடயங்களை அரசாங்கம் தனது தவறுகளை திருத்துவதற்கு பயன்படுத்தியிருக்கவேண்டும் ஆனால் அர்த்தமற்ற விதத்தில் நடந்துகொண்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அமைச்சர்கள் பதவி பறிக்கப்பட்டதை கண்டிப்பதுடன் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 11 கட்சிகளிற்கு தலைமைத்துவத்தை வழங்கவும் புதிய பயணத்தை ஆரம்பிக்கவும் சுதந்திரக்கட்சி தயாராகவுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

No comments